Freelancer / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு, மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ டக்ளஸ் தலைமையில், மாவட்ட செயலக முன்றலில் நேற்று (18) நடைபெற்றது.
சமூக நல்லிணக்க இப்தாராக நடைபெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி முனீர் முனவர் (நளிமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், மண்டல மகா விகாராதிபதி சுஹதகம சீலரத்ன ஹிமிஹிரத உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரின் தலைமையிலான குழுவினரின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் நடைபெற்றது. (N)
11 minute ago
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
44 minute ago