Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 14 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைலையடுத்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாதவகையில் அத்தியவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டு விலை நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2283/43ஆம் இலக்க 10.06.2022ம் திகதியன்று அதி விசேட வர்த்தமானியில் உள்நாட்டு வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாய் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அரிசியினை பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து சில வர்த்தகர்கள் கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்வதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை 1977 அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபையின் 0632222355 எனும் தொலைபேசி இலக்கத்திற்கும் அறிவிக்க முடியுமென தெரிவித்தார்.
இவ்வாறான வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்படும் வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
11 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
53 minute ago
2 hours ago