Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
கல்முனை நகரம், பள்ளிவாசல் வீதி, ஹாசிம் வீதி, அலியார் வீதி, ஸாஹிரா கல்லூரி வீதி ஆகிய பகுதிகளில் நாளை (02) காலை 08.45 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், அஸ்ரப் நகரில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணிவரையும் மின் தடைப்படும்.
கல்முனை யாட், ரெஸட் ஹவுஸ் வீதிகளில் சனிக்கிழமை (04) காலை 08.45 மணி முதல் மாலை 04.30 வரையும், சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும் மின் தடைப்படும்.
பன்ட்ஸ் வீதி, நைனாகாடு, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை (06) 08.30 மணி முதல் மாலை 05மணி வரையும் மின் தடைப்படும்.
கல்முனை நகரம், அம்மா கட்டடத் தொகுதி, பெரியநீலாவனை, பள்ளிவாசல் வீதி, ஹாசிம் வீதி, அலியார் வீதி, ஸாஹிரா கல்லூரி வீதி ஆகிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (07) காலை 08.45 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும்.
கல்முனை - வம்மியடி, துறைவந்தியமேடு, அல்மனார் பகுதிகளில் வியாழக்கிழமை (09) காலை 08.45 முதல் மாலை 04.30 மணி வரையும், நிந்தவூர் பிரதேசத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின் தடைப்படும்.
காரைதீவு, நிந்தவூர், அட்டப்பலம், அம்பாறை வீதி, கருவாட்டுக்கல், வழுனயடி, பசுஸ் மாவத்தை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை(11) காலை 08.45 மணி முதல் மாலை 04.30 வரையும், மின் தடைப்படும்.
பாலமுனை, அட்டாளைச்சேனை சில பகுதிகளில் திங்கட்கிழமை (13) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடைப்படும்.
அம்பாறை வீதி, கருவாட்டுக்கல், விழுனயடி, பசுஸ் மாவத்தை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (15) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 வரையும், மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago