2025 மே 05, திங்கட்கிழமை

அம்பாறையில் ரூ.5,000 வழங்கல் அமுல்

Princiya Dixci   / 2021 ஜூன் 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் மானியம் இன்று (02) முதல் வழங்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான வி.ஜெகதீசன் தெரிவித்தார்

இக்கொடுப்பனவு சமுர்த்தி பெறும் குடும்பங்கள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால், சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இக்கொடுப்பனவானது மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து சுமார் 43 சமுர்த்தி வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் சமுர்த்தி நிவாரணம் பெறக்கூடிய தகுதியான குடும்பங்கள் காணப்படுகின்றது.

அத்துடன், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வருமானத்தை இழந்த குடும்பங்கள், முதியோர்கள், நாட்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கொடுப்பனவும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் கிராம சேவகர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக வழங்கப்படுவதாகவும், பணிப்பாளர் வி.ஜெகதீசன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X