2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரச காணிகள் பலாத்காரமாக கைப்பற்றல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை, பொதுமக்கள் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், இன்று (10) தெரிவித்தார்.

அண்மைக்காலமாக ஆற்றின் இரு மருங்கிலுமுள்ள அரச காணிகளை, பொதுமக்கள், அடாத்தாகக் கைப்பற்றி எல்லையிட்டு மண் நிரப்பி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்பிரகாரம், கோணவத்தை ஆற்றின் இரு மருங்கிலும் அடையாளம் காணப்பட்டுள்ள அரச காணியில், கிழக்கு மாகாண காணி ஆணையாளரால், “இது அரச காணி; நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது” என எழுதப்பட்ட விளம்பரப் பலகைகள், குறித்த இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து, இந்த விளம்பரப் பலகையை நடும் திட்டத்தை முன்னெடுத்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆற்றின் இரு மருங்கிலும் அரச காணியை பலாத்காரமாகப் பிடித்திருப்போர், 14 நாட்களுக்குள் குறித்த இடத்தை விட்டு வெளியேறுமாறு எழுத்துமூலமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதெனவும், இதனை மீறுவோருக்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X