Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
மருதமுனை, மக்பூலியா கடற்கரைப் பிரதேசத்தில்; 65 மீற்றருக்குள் அமைந்துள்ள அரசாங்கக் காணியொன்றில் அத்துமீறி நுழைந்து, மண் நிரப்புவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் புதன்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெஸுர் தெரிவித்தார்.
அத்துடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புல்டோசரும்; லொறியும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
மக்பூலியா கடற்கரைப் பிரதேசத்தில் 65 மீற்றருக்குள் உள்ள பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்திப் பணிகள் மற்றும் கட்டுமான வேலைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையை மீறி, குறித்த காணிக்குள் மண் நிரப்ப முற்பட்டமையால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026