ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 ஜூன் 25 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கிணங்கவே, ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு, வெளி மாகாணங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக, கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டினார்.
இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிறுத்த முடிந்தால், முயற்சி செய்துபாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
“நமது நாட்டில் இயற்கை வளங்களை நாம் பாதுகாக்காமல் விடுவதனால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் போது, நமது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி வருகின்றன. ஆறுகள் மற்றும் கங்கைகளை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நமது கிழக்கு மாகாண சபை உருவாக்கி, நமது எதிர்கால சந்ததியினர் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
“திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள இயற்கையான கங்கைகள், ஆறுகளில் இருந்து ஆற்று மண் அகழ்வு வேலைகளில் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளின் தலையீடுகள் உள்ளன.
“இந்த விடயத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசின் படியே, ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், கிழக்கு மாகாண மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டிய அற்று மண்ணை, வெளி மாகாணங்களுக்கு கொண்டு செல்லும் முறை உருவாகியுள்ளது.
“ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நிறுத்த முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள். அப்படி நடந்தால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026