Princiya Dixci / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 03 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள நெல் வயல்களே நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ள தோடு, போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம் போதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக் கெடுத்துள்ளன. மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால்கள் தோண்டப்பட்டுள்ள போதிலும் முறையாக நீர் வழிந்தோடவில்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மழைநீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்புரவு செய்து, மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரைவடிந்தோட செய்ய உள்ளூராட்சிமன்றங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
10 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago