2025 மே 05, திங்கட்கிழமை

அவதானத்துக்குரிய பகுதிகள் அடையாளம்

Princiya Dixci   / 2021 மே 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கல்முனை வடக்கு, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள், இவ்வாரம் மிக அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன், இன்று (16) தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையில் கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 18 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 08 பேரும், சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவூகளில் தலா 07 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 04 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 03 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 73 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்  சமூக மட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 13 சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X