Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூன் 11 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் 2016/2017 கல்வியாண்டில் இருவருடக் கற்கையை நிறைவு செய்த ஆசிரிய பயிலுநர்களுக்கு, இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதிப் பரீட்சை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் மௌலவி ஏ.ஸி.எம். சுபையிர் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள், தங்களது பரீட்சை அனுமதி அட்டையை, இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
அத்துடன், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், உடற்கல்வி பாடநெறிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிலுநர்களுக்கான செயன்முறைப் பரீட்சை, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இக்கலாசாலையில் 2016/2017 கல்வியாண்டில் இருவருடக் கற்கையை நிறைவு செய்த ஆசிரியர் பயிலுநர்கள் சுமார் 315 பேர், கடந்த மே மாதம் 30ஆம் திகதி, தங்களது முன்னைய பாடசாலைகளில் மீளக் கடமை பொறுப்பேற்றுள்ளனர். இவர்களே தற்போது பரீட்சைக்கத் தோற்றவுள்னர்.
எனவே, குறித்த ஆசிரிய பயிலுநர்கள், அலுவலக நேரத்தில் கலாசாலைக்கு சமுகமளித்து, தங்களது பரீட்சை அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
10 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago