2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆன்மிக பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2022 ஜனவரி 26 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், காரைதீவில் அமைந்துள்ள இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவக சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில், முதல்தடவையாக பல ஆன்மீக கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யோகாசனம், பண்ணிசை, பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் , கதாப்பிரசங்கம் மற்றும் பேச்சாற்றலை வளர்த்தல் என்பவற்றில் 06 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும்.

வார இறுதி நாள்களில்  நடைபெறவிருக்கும் இப்பயிற்சிநெறிகள், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் இவற்றுக்கு விண்ணப்பிக்க முடியுமென இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

மேலதிக விவரங்களுக்கு 0779309257 (கு.ஜெயராஜி) எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .