Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையில் மிகவும் பழுதடைந்த நிலையில் பாவனைக்குதவாமல் பல வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த சில இயந்திரங்கள், மாநகர மேயரின் 'மீள் உருவாக்கம்' எனும் எண்ணக்கருவுக்கமைவாக, மாநகர சபையின் வாகன திருத்துநர்களின் பங்களிப்புடன், குறைந்த செலவில் திருத்தியமைக்கப்பட்டு, பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கையளிப்பு நிகழ்வு, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (07) நடைபெற்றது. இதில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்கிப் லோடர் (Skip Loader), ரோட் லோடர் (Road Loader), குபோடா ட்ரெக்டர் (Kubota Tractor) போன்றன மாநகர சபையின் சேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வரால் இதன்போது கையளிக்கப்பட்டன.
மாநகர மேயரின் 'மீள் உருவாக்கம்' எனும் இத்திட்டத்தின் கீழ், அவரது நேரடி ஆலோசனை, வழிகாட்டலில் ஏற்கெனவே 04 உழவு இயந்திரங்கள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, அவை திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் அச்ச சூழ்நிலையிலும் கல்முனை மாநகர மேயரும் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் உயர் அதிகாரிகளும் சமூக இடைவெளிகளை பேணாது, முகக்கவசங்களை அணியாது பொது வெளியில் நடமாடுவதும் கூட்டங்கள் நடத்துவதும் கண்டிக்கக் கூடிய விடயமாகுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய அரசியல் செயற்பாட்டாளர் இசட்.ஏ.நௌஷாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊருக்குத்தான் உபதேசமே தவிர ,உனக்கில்லை எனும் நிலையில் செயற்படும் கல்முனை மாநகர நிர்வாகத்துக்கு கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையும் சுகாதாரத் திணைக்களமும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago