Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2021 மே 17 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் மக்களது செயற்பாடுகள் யாவும் இயல்பு நிலைக்கு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் பஸ் தரிப்பிடத்திலும் அதிகளவான பயணிகள் தரிந்திருந்ததை காண முடிந்தது.
இதேநேரம் அரச திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் வங்கிச்சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் சில வங்கிகளுக்கு அதிகளவான மக்கள் சென்றதையும்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒருவர் கொரோனா தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அன்ரிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றன.
அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியேறுவதை முற்றாக தவிர்ப்பதுடன் அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைவாக செயற்படுமாறும் அரசுக்கும் சுகாதாரதுறைக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago