2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

இறக்காமத்தில் உணவு ஒவ்வாமை: பாத்திரங்கள் பரிசோதனை

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இறக்காமம், 10ஆம் கொலனியில் உணவு ஒவ்வாமையால், பலர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,  உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட நெய், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் காலாவதி திகதி, பாவனையின் தன்மை பற்றி சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, போதிய வசதிகளற்ற மிக சிறிய இந்த வைத்தியசாலையில், நான்கு மருத்துவர்களும் ஓர் அம்புலனஸ் வண்டியும் 11 கட்டில்களுமே காணப்படுவதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நடைபாதையிலும் வைத்தியசாலையின் முன்றலிலும் கூடாரங்கள் போன்று அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி அனர்த்தம் தொடர்பில் மேலதிக உதவிகளை வழங்கும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் உடனடியாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து, நேற்றுமுன்தினம் (06) இரவு, அங்கு வந்திருந்த பணிப்பாளரை பொதுமக்கள் தாக்குவதற்கு முற்பட்டதோடு பெரும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.

இறக்காமம், வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் வியாழக்கிழழை(06) இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட இலவச உணவை உட்கொண்டதில் ஒவ்வாமை காரணமாக  600 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்கள்,  அம்பாறை, இறக்காமம், கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கண்டிக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் மூன்று கற்பிணித்தாய்மார்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X