Suganthini Ratnam / 2017 மே 16 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருதிலிருந்து அம்பாறை நகருக்கு இடமாற்றப்பட்டுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணக் காரியாலயமானது, மீண்டும் சாய்ந்தமருதில் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடாகப் பணிக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நேற்றுத் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீன விஜயத்தில் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் இந்தக் காரியாலய விவகாரம் தொடர்பில் தான் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதமரிடம் அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அக்காரியாலயம் மீண்டும் சாய்ந்தமருதில் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தக் காரியாலயம் சாய்ந்தமருதிலிருந்து அம்பாறை நகருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடமாற்றப்பட்டிருந்தது.
சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்வது தொடர்பாக பேசி வருகின்ற பிரதமரால், சிறுபான்மையின மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்திருந்த காரியாலயத்தை பெரும்பான்மையின மக்கள் வாழும் அம்பாறை நகருக்கு மாற்றிய விடயத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026