2025 மே 02, வெள்ளிக்கிழமை

இளைஞர் வழிகாட்டல் பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

இளைஞர், யுவதிகளுக்கான  இரண்டு நாட்களைக் கொண்ட வதிவிடப் பயிற்சி முகாம் தம்பட்டை சுவாட் பயிற்சி    நிலையத்தில் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

அக்கரைப்பற்றுச் சுவாட் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி முகாமில் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொழில் வழிகாட்டல், ஆளுமை விருத்திச் செயற்பாடு ஆகியவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு, தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இப்பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X