Suganthini Ratnam / 2017 மார்ச் 28 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இந்த வருடத்தின் ஜனவரி முதல் மார்ச்; 25ஆம் திகதிவரையில் அக்கரைப்பற்றில் 5,520 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்துகளின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று (28) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தியமை போன்ற குற்றங்களுக்காக 17,540 வழக்குகள் கடந்த ஆண்டு அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்டன.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் கூடுதலான விபத்துகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026