2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை’

Editorial   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவன் மாளிகைக்காடு தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய "இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அரங்கில், நேறறு (05) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு, கிழக்கு இளைஞா்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். தெளபீக் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், பேராசிரியர் எம்.ஜ.எம். கலீல், கலாநிதி எஸ்.எம்.ஜயூப், அரசியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பெளஸர், இக்றா நிறுவன பணிப்பாளா் யூ.சத்தார், விரிவுரையாளர் என்.லும்னா ஷாபி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நூலனது நடைமுறைக்கு சாத்தியமான பல்வேறு விடயங்களை விமர்சன ரீதியாக நோக்கப்பட்டிருப்பதுடன், பிரதான 08 தலைப்புக்களை மையமாக வைத்து 68 பக்கங்களைக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .