Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில், மூன்றாம் கட்டமாக சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வி.ஜெயந்தி என்ற பயனாளிக்கு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (08) நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடு கட்டப்படவுள்ளது.
வீடு நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இப்புதிய வீட்டு நிர்மாணம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ், ஆறு இலட்சம் ரூபாய் செலவில் பூர்த்திசெய்யப்படவுள்ளது.
நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சமுர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ், இவ் வீடமைப்பு நிர்மாணத்துக்கான குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
43 minute ago
49 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
49 minute ago
5 hours ago