எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூன் 23 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் உணவகமொன்றில் ஏற்பட்ட கைகலப்பினால் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள உணவகமொன்றில் வியாழக்கிழமை (22) இரவு பல்கலைக்கழக இரு மாணவர்கள் தேனீர் அருந்திவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து உணவக உரிமையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சைட்டத்துக்கு தெரிவித்தும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை எதிர்த்தும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான முன்றலில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை தெரிவித்த வந்தனர். இக் கூடாரம் இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளரும், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தெரிவித்தார்.
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026