2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உண்ணாவிரதத்தில் முன்னாள் எம்.பிக்கள் இணைவு

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பிக்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிசேன் உள்ளிட்ட பிரமுகர்கர்கள் பாண்டிருப்புக்கு வந்து இணைந்துகொண்டனர்.

அதேவேளை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற மன்ற உறுப்பினர் த.கலையரசனும் சமுகமளித்திருந்தார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி, லண்டனில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று (07) மூன்றாவது நாளாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோவில் முன்றலில் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.

அதேபோன்று நல்லூரிலும் மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .