Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 02 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தான் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து ஊர்காவல்; படைவீரர் ஒருவர், இறக்காமம் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சனிக்கிழமை (1) இரவு கைவிட்டுள்ளார்.
எஸ்;.ரீ.முஹம்மது நியாஸ் (வயது 36) என்பவர், கடந்த மே மாதம் 23ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் சிவில் பாதுகாப்புக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து, கடந்த 30ஆம் திகதி முதல் இறக்காமம் ஆலையடிச் சந்தியில் அப்படைவீரர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்தார்.
இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவருடன், இறக்காமம் பள்ளிவாசல் நிர்வாகப் பிரமுகர்களும் பொது அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும்; சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது, மேற்படி படைவீரரின் பிரச்சினையைக மேற்படி பிரமுகர்கள் கேட்டறிந்துகொண்டனர். பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடித் தீர்வு பெற்றுத் தருவதாக மேற்படி பிரமுகர்கள்;; உறுதியளித்தனர். இதனை அடுத்து, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
தனது 17 வருடகாலச் சேவையில் 14 வருடங்களாக அங்கவீனராக இருந்துகொண்டு, சேவையாற்றி வந்துள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மேற்படி படைவீரர் தெரிவித்தார்.
முறையற்ற வகையில் விடுமுறை பெற்றுக்கொண்டதன் காரணமாகவே மேற்படி ஊர்காவல் படை வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஆர்.வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேன்முறையீடு செய்யும் பட்சத்தில், மீளவும் அவரை சேவையில் இணைப்பது பற்றிப் பரிசீலிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago