2025 மே 01, வியாழக்கிழமை

உரமானியத்துக்கு பணம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017/2018 பெரும்போக நெற் செய்கை பண்ணப்பட்ட விவசாயிகளுக்கு உரமானியத்துக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், இன்று (17) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஹெக்டேயர் நெற்காணியில் பெரும் போகத்துக்கான வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கமைய விவசாயிகளுக்கான  உரமானியத்துக்குப் பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகின்றது.

பெரும் போக விவசாயிகள், உரமானியத்துக்காக விவசாய அமைப்புகள் ஊடாக விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைய அரசாங்கத்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏக்கர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் ஒரு விவசாயிக்கு இரண்டரை ஏக்கருக்கு உரமானியத்துக்கான பணம் வழங்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .