2025 மே 02, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கமல் நெத்மினி

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எஸ்.எல்.எ.கமல் நெத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர், தனது கடமையை கடமையேற்றுள்ளார். அம்பாறையைச் சேர்ந்த கமல் நெத்மினி, ஏற்கெனவே மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றியவராவார்.

உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இருந்த எ.ரி.எம்.றாபி, அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நெத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X