2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஊடக சுற்றுலா நாளை ஆரம்பம்

Gavitha   / 2017 பெப்ரவரி 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின், கிழக்கிலிருந்து வடக்குக்கான மூன்று நாள் “ஊடக உலா” சுற்றுப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (26) காலை ஆரம்பமாகவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன் தலைமையில், 25 ஊடகவியலாளர்கள் இச்சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இச்சுற்றுப் பயணம், திருகோணமலை மற்றும் புல்மோட்டை ஊடாகச் சென்று முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க  முக்கிய  இடங்களை பார்வையிடவுள்ளதுடன், வடமாகாண சபை முதல்வர்  மற்றும் ஆளுநர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் அங்குள்ள ஊடகத் துறைசார்ந்த நிறுவனங்களையும் சென்று பார்வையிடவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .