Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்> எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைத்துப் போட்டியிட வேண்டிய தேவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடையாது என அக்கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ்> ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி மற்றும் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தரப்புகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் இன்றுகேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது 'கிழக்கு மாகாண மக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரளத் தயாராகியுள்ளனர். கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது> எமது கட்சிக்கு கிடைத்த மக்கள் ஆதரவு தற்போது பன்மடங்காக அதிகரித்துள்ளது. இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தில்; அதிகூடிய வாக்குகளைப் பெறும் ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது” என்றார்.
'எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தோ அல்லது வேறு வியூகத்தின் அடிப்படையிலோ போட்டியிட்டு 10 ஆசனங்களைப் பெற்று> கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரக்கூடிய வாய்ப்புள்ளது.
'ஆகையால் வேறு தரப்புகளுடன் கூட்டமைத்துப் போட்டியிட வேண்டிய எந்தவொரு தேவையும் எமது கட்சிக்கு கிடையாது. இதுவரை எந்தவொரு தரப்பினருடனும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுமில்லை> தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை.
'அதேவேளை> ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய சிலரும் மாற்றுக் கட்சிகளிலுள்ள சிலரும் எமது கட்சியின் தலைவர்> தவிசாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர். அத்தகையோருக்கு எமது கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கும் வாய்ப்புள்ளது.
'எது எவ்வாறாயினும்> சமூக நலன் கருதி வேறு கட்சிகளுடன் கூட்டமைத்துப் போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டால்> தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் அதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைமைத்துவம் தயாராக இருக்கின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago