Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முரணான எல்லை நிர்ணயங்கள் மீளத் திருத்தியமைக்கப்பட்டதன் பின்னரே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களின் வட்டார எல்லைகள், நியாயமான முறையில் மீளத் திருத்தியமைக்கப்பட்ட பின்னரே, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மு.கா இருக்கிறது என மு.கா.வின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி, இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் அதாவுல்லாவின் காலத்தில், எல்லை நிர்ணய சபையொன்று நிறுவப்பட்டு உள்ளூராட்சிமன்றங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. இவ்வாறான எல்லை நிர்ணயங்கள், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்' என்றார்.
'முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறக்கூடிய முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள், அருகிலுள்ள ஏனைய வட்டாரங்களுடன் இணைக்கப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல், புதிய வட்டார முறையில் நடைபெறவுள்ளதால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படவுள்ளது.
இது தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகள் முறையிட்டதன் காரணமாகவே எல்லை நிர்ணய முறைப்பாடுகளை விசாரித்து, எல்லைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஒழு குழு நியமிக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட்டாரங்களின் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உள்ளூராட்சிமன்றங்களின் வட்டார எல்லைகள் அரசியல் இலாபங்களுக்காகவன்றி நியாயமான முறையில் மீளத் திருத்தியமைக்கப்பட்டதன் பின்னரே, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. உள்ளூராட்சிமன்ற எல்லைகள் தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளும் குழுவிலும் கட்சியின் தலைவர் அங்கம் வகிக்கின்றார். எனவே, சமூகம் சார்ந்த இந்த விடயத்தில் மு.கா உறுதியாகவே இருக்கிறது' என அவர் மேலும் கூறினார்.
31 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
5 hours ago