Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
நாங்கள், தமிழ்த் தேசிய அரசியல், தமிழ் பேசும் இனம் எனும் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ் பேசும் இனம் எனும் அடிப்படையில் இரு சமூகங்களுக்கும் ஒற்றுமை அவசியம் என வலியுறுத்தினார்.
எனினும், இந்த ஒற்றுதை அரசியல்வாதிகள் இடையே குறைவாகவே உள்ளது எனவும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைக்குத் தடையாக உள்ளனர் எனவும் அவர் சாடினார்.
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்துக் களவாடப்படும் மீன்கள், சுருக்குவலைகள் தொடர்பில், காரைதீவிலுள்ள மாளிகைக்காடு - அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்றையில், “வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் இருப்பு சம்பந்தமாகவும் மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் எடுத்துரைத்து வருகின்றோம். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்படியில்லை.
“கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில்முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இரு சமூகத்தையும் குழப்புகின்றனர். இதனாலே தமிழ் பேசும் மக்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago