2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிட்டங்கிப் பாலத்தை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கை இந்த வருடத்தில் எடுக்கப்படும் எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு புதன்கிழமை (22) நடைபெற்றபோது, இப்பாலத்தை புனரமைப்பது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் பிரேரணையை முன்வைத்தார்.

இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவித்தபோது,'அம்பாறை, மட்டக்களப்பு, சம்மாந்துறை, கல்முனை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் இந்தப் பாலம், வெள்ளம் ஏற்படும் காலத்தில் நீரில் மூழ்குகின்றன. இதனால், பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, இப்பாலத்தைப் புனரமைப்பது தொடர்பான திட்டவரைபு தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .