Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனையைச் சேர்ந்த 06 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற 2 இயந்திரப் படகுகள் காணாமல் போன நிலையில், அவற்றில் ஒன்று 2 மீனவர்களுடன் மாலைதீவுக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது மாலைதீவுத் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும் இன்று (05) அதிகாலை தங்களின் குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 படகுகள், திசை மாறிச்சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், அப்படகுகளின் எரிபொருளும் முடிந்துள்ளது.
கடலில் வீசும் காற்றினால் நகர்ந்து கொண்டிருந்த மேற்படி படகை மாலைதீவுக் கடற்படையினர் அவதானித்துள்ளனர். இந்நிலையில், அப்படகை மாலைதீவுத் துறைமுகத்துக்குக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட படகில் 3 மீனவர்கள் இருந்த போதிலும், மற்றைய படகிலுள்ள மீனவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மீனவர் அதில் ஏறியதாகவும் பின்னர் அப்படகு வேறு திசை நோக்கி நகர்ந்து விட்டதாக மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
23 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago