2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸாருக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

ஒலுவில் ஜும்மா பள்ளிவாசலின் அனுசரணையுடன் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளிவாசல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை  நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்ட அவர், இரவு வேளைகளில்  சந்தேகத்துக்கிடமானவர்கள்; நடமாடினால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .