2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கடலில் மூழ்கி சிறுவன் மரணம்

Editorial   / 2021 நவம்பர் 10 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.நடராஜன்

அம்பாறை – பொத்துவில் சின்ன புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (08) மாலை முதல் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் நேற்று (09) பிற்பகல் வேளையிலேயே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்கச் சென்ற சிறுவன், வீடு திரும்புவதற்காக கொட்டுக்கல் முகத்துவாரத்தை கடக்க முற்பட்ட வேளையிலேயே, நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தான்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .