Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 23 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷல் இஸ்மாயில்,v];.fhu;j;jpNfR
அக்கரைப்பற்று கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் நேற்று(22) இரவு 11 மணியளவில், கடல் நீர் திடீரென குடியிருப்பு நிலப்பிரதேசத்திற்குள் புகுந்ததால், மக்கள் சுனாமி என எண்ணி, அப்பிரதேசத்தை விட்டு வேறு பிரதேசத்திற்கு நகர்ந்துள்ளனர்.
கடல் நீர் அப்பிரதேசத்திலுள்ள குடியிருப்பு மற்றும் பாதை நிலப் பகுதிக்குள் புகுந்தமையினால், அப் பிரதேசத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதுடன், மக்களும் அச்சத்திற்குள்ளாகி இருந்தனர்.
இதன்போது, கடல் அலை பெரும் கொந்தளிப்புடன், வழமையைவிட வேகமாக இருந்ததாகவும், கடல் நீர் சுமார் 15 மீற்றர் வரையான நிலப் பகுதிக்குள் புகுந்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
ஏனைய மாதங்களை விட மார்கழி மாதத்தில் இவ்வாறு இடம்பெறுவது வழமை. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என, அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago