2025 மே 01, வியாழக்கிழமை

கணினி மயப்படுத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2017 மே 15 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் சகல தரவுகளையும் கணினி மயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். ஹாஸிம், இன்று தெரிவித்தார்.

கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மத்தியஸ்த சபையின் தரவுகளைக் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கட்டடத்தின் ஒரு பகுதி இதற்கென ஒதுக்கப்பட்டு கணினி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கணினி மயப்படுத்துவதன் மூலம் மத்தியஸ்த சபைக்கு பொது மக்களால் முன்வைக்கப்படும் பிணக்குகளை கலந்தரையாடலின் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் தீர்த்து வைக்க முடியும்.

இவைகளைக் கருத்தில்கொண்டு மத்தியஸ்த சபையின் தரவுகளைக் கணினி மயப்படுத்துமாறு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய? இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .