Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சம்மாந்துறை, கரங்காவட்டை விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
கரங்காவட்டை பகுதியில் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்த உறுதி வைத்திருந்த 300 விவசாயிகளை, விவசாயம் செய்ய முடியாமல் அடாத்தாக அத்துமீறி நுழைந்து அண்மையில் குடியேறியவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வியசாயம் செய்ய முடியாமல் தடுக்க முனைந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு விடுத்த கோரிக்கைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், அம்பாறை மாவட்டச் செயலாளர், அம்பாறை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஏனைய திணைக்கள அதிகாரிகளோடு, நேற்று (28) கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், பூர்வீகமாக விவசாயம் செய்துவந்த விவசாயிகளுக்கு தொடர்ந்தும் தடையின்றி விவசாயம் செய்ய மாவட்டச் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago