Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டம், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில், முஸ்லிம் சமய கலாசார உத்தியோகத்தராகக் கடமையாற்றும் மௌலவியொருவரை, அவரது கலாசார உடையான தொப்பியுடன், அலுவலகத்தில் கடமை செய்ய அனுமதிக்க முடியாது என, பிரதேச செயலாளர் தடுத்தமையானது, கண்டிக்கதக்க விடயமென, அம்பாறை மாவட்ட சர்வமதப் பேரவை தெரிவித்தது.
கடந்த மூன்று வருடத்துக்கும் மேலாகக் கடமையாற்றிவரும் இவர், பல்வேறு அழுத்தங்களின் பின்னர், தற்போது பொத்துவில் பிரதேச செயலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது, பழிவாங்கலாகவும் அதேவேளை அவரின் மதச் சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதாகவும் உள்ளதென, அம்பாறை மாவட்ட சர்வமதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் நேற்று (27) ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே, மதத்தலைவர்களால் இவ்வாறு கூறப்பட்டது.
ஆகவே, பாதிக்கப்பட்ட மௌலவிக்குத் தக்க தீர்வினை, அரச அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் வேறு அலுவலகங்களிலும் இவ்வாறான நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்ட அவர்கள், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், தாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவி ஆதம்பாவா அப்துல் அஸ்வரினால், இது தொடர்பான கடிதம் ஒன்றின் பிரதியும் ஊடகவியலாளர்களிடம் வழங்கப்பட்டது.
அக்கடிதத்தில், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக, கல்முனைப் பிரதேச செயலகத்தில் தான் கடமையாற்றி வருவதாகவும் பௌத்த மதப் பிரதேச செயலாளர் கடமையாற்றிய காலத்திலும், இவ்வாறு கலாசார உடையுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளரே தடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 7 வருடங்களா,க சமாதானப் பேரவையின் உறுப்பினராகச் செயற்பட்டு நாட்டின் பல்லின கலாசாரத்துக்காக உழைக்கும் தனக்கே இந்நிலை தோன்றியுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேச செயலாளர் முகமட் கனி தெரிவிக்கையில்,
அலவலக நடைமுறையின் படியாகவே தனது அலுவலகம் நடைபெறுகின்றது. இதில் கலாசாரமோ, மதமோ, மார்க்க ரீதியாகவோ யாருக்குமான பாகுபாடுகளும் பாரபட்சமும் காட்டப்படவில்லை
தனது அலுவலகத்தில் கடமையாற்றும் பெண்கள் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், கலாசார உடையை பின்பற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அரச சுற்று நிருபங்களுக்கு அமைவாக தான் செயற்படுவதாகவும் கூறினார்.
அதேவேளை, அவரது இடமாற்றம், கலாசார அமைச்சினால் வழங்கப்பட்டதாகவும் அதற்கு தான் பொறுப்பில்லை எனவும், அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவரது இடமாற்றத்தை இரத்து செய்வது அவரைப் பொறுத்தது எனவும் தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புக்களுக்கு தான் தடையாக அமையவில்லை எனவும், பிரதேச செயலகத்துக்கு கலாசார உடையுடன் யாரும் வருவதை தான் மறுக்கவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025