Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Yuganthini / 2017 மே 21 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனையில் இடம்பெற்ற 'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017' நிகழ்வில், 10 விடயங்களை உள்ளடக்கிய கல்முனை பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
சமகால கல்முனையை எடைபோட்டுக் காட்டும் கல்முனையின் கல்வி, சமூக, பொருளாதார தகவல் திரட்டு - 2016இன் முடிவுகளை ஆய்வுசெய்யும் ஆய்வரங்கமானது, சனிக்கிழமை (20) காலை 9 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை, கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் கல்முனையன்ஸ் போரத்தினால் நடத்தப்பட்டது.
இதன்போது, தனிநபர் கல்விக் களஞ்சிய செயலி, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கல்முனையின் கல்வி, சமூக, பொருளாதார தகவல் திரட்டின் ஆய்வறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் கல்வி, சுகாதார, சமூக கலாச்சாரம், பொது வசதிகள், பொருளாதாரம் போன்ற துறைசார் ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டு, துறைசார்ந்த குழுக்களினால் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வுகளும் சமர்ப்பணம்களும் செய்யப்பட்டன.
ஆய்வரங்கதின் இறுதியில் 10 விடயங்களை உள்ளடக்கிய கல்முனை பிரகடனம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
கல்முனையின் அடையாளமும், அபிவிருத்தியும் பேணப்படுவது அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும், சிவில் சமூகத்தினதும் தலையாய கடமையாகும். கல்முனையின் அபிவிருத்திக்கு முன்வரும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ, கல்முனையைச் சார்ந்த எவரும் குந்தகம் விளைவித்தலாகாது.
இன, மத, குல, கட்சி பேதம் மறந்து, கல்முனையின் அபிவிருத்திக்கு கைகோர்ப்பதே இன்றைய நமது தேவையயும் கடமையுமாகும். தேர்தல் காலங்களுக்குப் பின்னரும் அரசியல்வாதிகள், கல்முனையின் உரிமையிலும் அபிவிருத்தியிலும் கவனஞ்செலுத்த வேண்டும். கல்முனையின் 'கல்வி அபிவிருத்திக்கான நிதியம்' ஒன்றை தாபிக்க வேண்டும். வட்டியை ஒழிப்பதற்காக 'வட்டியில்லா கடனுதவி நிலையம்' ஒன்றை நிறுவ வேண்டும்.
கல்முனையின் அபிவிருத்தியில், அரச மற்றும் தனியார் சேவையாளர்களும் பங்களிப்பு நல்கவேண்டும் உள்ளிட்ட 10 விடயங்கள் அடங்கிய பிரகடனமே, இதன்போது நிறைவேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago