Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 04 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
லண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று முதல் 09 பிரமுகர்களுக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரசன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வில்சன் கமலராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுபோ, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் மற்றும் தர்சன் கல்முனை தா.பிரதீபன், திருக்கோவில் செல்வராணி ஆகிய 9 பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவுப்பத்திரம், பொலிஸாரால் நேற்று (03) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்படி 9 பேருக்கும், நேற்று (03) தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை பொத்துவில் நீதவான் நீதிமன்றம்இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இக்காலப்பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டி நடைபவனி மேற்கொள்ள இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago