Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மெளலானா
கல்முனை மாநகர சபையின் சபா மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வந்த கல்முனை நகர மண்டபத்தில் பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கபட்டிருப்பதாக மாநகர மேயர் செயலகம், இன்று (08) அறிவித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைவாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றும் மேயர் செயலகம் தெரிவித்துள்ளது.
கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டடத் தொகுதியை அமைக்கும் பொருட்டு பழைய கட்டடத் தொகுதியை உடைத்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையால் கடந்த சில மாதங்களாக மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு, கல்முனை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு வந்தது.
எனினும், பழைய கட்டடத் தொகுதி இன்னும் உடைத்து அகற்றப்படாமையால் அங்குள்ள சபா மண்டபத்திலேயே மாதாந்த பொதுச் சபை அமர்வை நடத்த முடியுமென்றும் நகர பண்டபத்தை, பொது மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும் எனவும் 2020-06-29 திகதி நடைபெற்ற பொதுச் சபை அமர்வில், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் அக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன்படி, கல்முனை நகர மண்டபத்தில், பொதுமக்களின் திருமணம் வைபவங்கள் உட்பட கலை, கலாசார விழாக்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள், பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15 minute ago
41 minute ago
47 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
47 minute ago
5 hours ago