Editorial / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
விசேட சபை அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (08) பிற்பகல், இடம்பெற்றது.
இதன்போது, வரவு - செலவுத் திட்டத்தை மாநகர மேயர் சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் பட்ஜெட் தொடர்பில் கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர். இதையடுத்து பட்ஜெட் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 02 ஆசனங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில், 32 உறுப்பினர்கள் இந்த அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர். இவர்களில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர். 07 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
ஆளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்கள், ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஓர் உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓர் உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் நடுநிலை வகித்திருந்தனர்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 05 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் ஓர் உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.
23 minute ago
28 minute ago
37 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
37 minute ago
51 minute ago