Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பு, நாளை (08) இடம்பெறவுள்ளது.
இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாதென கட்சியின் கல்முனை கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (06)மாலை கல்முனையில் நடைபெற்றது.
கல்முனைத் தொகுதி கிளை செயலாளர் சிவஞானம் ஜெயக்குமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ.நிதர்ஜன் ஆகியோர் இங்கு கருத்துகளை வெளியிட்டனர்.
இவர்கள் கருத்துரைக்கையில், “கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனைத் தமிழர்களின் பிரச்சினையாக புரையோடிப்போயுள்ள கல்முளை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பலமுறை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, எல்லை நிரணய பிரச்சினைகள் தொடர்பில் இன நல்லிணக்க ரீதியாக செயற்படாத சூழ்நிலையில், தொடர்ச்சியாக கல்முனை மாநகர சபை வரவு - செலவுத் திட்டத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக்கும் ஆதரவு வழங்கக்கூடாது என தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளோம்” என்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago