2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்முனை பிரதேச செயலாளராக லியாக்கத் அலி கடமையேற்றார்

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ், சர்ஜுன் லாபீர், நூருல் ஹுதா உமர், சகா

கல்முனை பிரதேச செயலாளராக ஜே.லியாக்கத் அலி, தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (01) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவருக்குக்கான நியமனத்தை, அரச சேவைகள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தைக் கொண்ட மருதமுனையைச் சேர்ந்த ஜே.லியாக்கத் அலி, காரைதீவு, சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்நிகழ்வில், இறக்காம பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம்.கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல். பதிறுத்தீன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .