2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றல்

Princiya Dixci   / 2021 மே 13 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். அப்ராஸ்

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை பல்வேறு முன்னெடுப்புக்களை செய்துவருகிறது.

அதன்  ஓரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணனனின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம் .அஸ்மி தலைமையில், கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை,  கல்முனை  தலைமையக பொலிஸ்  நிலையத்தில் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜயரட்ன,  கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ்  பரிசோதகர் கே.டீ. சுஜித் பிரியந்த, கல்முனை பொலிஸ் நிலைய பெரும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமீல் உட்பட கல்முனை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார்  கொரோனா  தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

மேலும் இதன்போது மாவட்ட பொது  சுகாதர பரிசோதகர் ஏ.எம்.ஜெளபர், பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதர பரிசோதகர்  எம் பாறூக், பொது சுகாதர  பரிசோதகர்கள், கல்முனை தெற்கு சுகாதர  வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X