2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 19 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அகம்மதுலெப்பை றபீக் என்பவர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட செய்னுலாப்தீன் கலீலூர் றகுமான், அவரது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து, அந்த வெற்றிடத்துக்கே றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையினூடாக கல்முனை மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலகர் திலிண விக்கிரமரத்ன நியமித்துள்ளார்.  

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினரான அகமதுலெப்பை றபீக், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .