Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 30 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா, பாறுக் ஷிஹான்
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை (01) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (03) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், பீச் வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, வீவீ வீதி, சாய்ந்தமருது பொலிவோரியன், கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.
திங்கட்கிழமை (05) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர், வௌவாலோடை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்கிழமை (06) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை கிராம பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.
புதன்கிழமை (07) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிஜ்ரா புரம், செந்நெல் புரம் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை (08) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி, நைனாகாடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.
சனிக்கிழமை (10) நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை ஜீ.ரீ.சி வீதி, அல்ஹிலால் வீதி, முந்தியடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago