Princiya Dixci / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் நாளை (04) முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
நீண்ட கால நோய்களுடன் காணப்படும் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு, சிறுவர் விசேட நிபுணர்கள் மற்றும் பொது நிணர்கள் உள்ள வைத்தியசாலைகளில், இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
விசேட தேவையுள்ள சிறுவர்கள் தங்களது கிளினிக் அட்டையுடன் அல்லது கிளினிக் செல்லாமல் வீட்டில் உள்ள சிறுவர்கள் அருகியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறும், ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ந்து 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் மையங்களில் கிரமமான முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்துடன் தொடர்புகொண்டு, இது தொடா்பான தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025