2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கல்முனைக்கு புதிதாக 30 வைத்தியர்கள்

Editorial   / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

புதிதாக நியமனம் பெற்ற வைத்திய உத்தியோகத்தர்களுக்கான அறிமுக நிகழ்வும் சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் வழங்கி வைப்பு நிகழ்வும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  நேற்று (25)  நடைபெற்றது.

பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் ரிபாஸின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், பிரிவுத் தலைவர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன், தத்தமது பிரிவு தொடர்பான விசரங்களையும் பணிமனை மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பான விவரங்களையும்  வழங்கினர். 

இதன்போது உரையாற்றிய பணிப்பாளர், வைத்தியசாலையில் பொதுமக்கள் முறைப்பாடு இன்றி வைத்தியர்கள் எவ்வாறு சேவையை வழங்க வேண்டும் என்பது பற்றி வலியுறுத்தியதுடன், பிரிவு தலைவர்களும் தத்தமது பிரிவுகளினால் முன்னெடுக்கப்படுகின்ற சேவை தொடர்பான விவரங்களையும் தாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு உங்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் தமது கருத்துகளை வழங்கினார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X