2025 மே 01, வியாழக்கிழமை

கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

7  இலட்சத்தி 50 ஆயிரத்துக்கும் அதிகமான கள்ளநோட்டுடன் நேற்று (15) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில், பாலமுனை, கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். 

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,  அக்கரைப்பற்று பொலிஸாரால் இம்மூவரும் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள், நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கைதாகிய சந்தேக நபர்கள் தங்கிய  வீட்டில் இருந்து பிறின்டர்  மற்றும் கணினி உட்பட 5,000 ரூபாய் நோட்டு அச்சிடும் தாள்கள், அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதான  சந்தேக நபர்களில்  ஒருவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி, விடுதலையானவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .