Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மே 29 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியால் காணிகளை இழந்து, பல வருட காலமாக இழப்பீடு எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, விரைவில் இழப்பீடுகளும் மாற்றுக்காணியும் வழங்குவதற்கு, துறைமுக அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், இன்று (29) தெரிவித்தார்.
துறைமுக அதிகார சபையால் சுவீகரிக்கப்பட்ட சுமார் 14 காணி உரிமையாளர்களுக்கு, இதுவரை எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், துறைமுக அதிகார சபை, இழப்பீடு வழங்கும் பொருட்டு, காணி உரிமையாளர்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அழைப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொண்டு, அவர்களின் இழப்பீட்டுக் கோரிக்கை விருப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதன் போது, காணிகளை இழந்தவர்களுக்கு ஒரு பேர்ச்சஸ்க்கு 3,000 ரூபாய் வழங்குவதாகவும், 20 பேர்ச்சஸ்க்கு அதிகமாகவுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு இழப்பீடும் மாற்றுக்காணியும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு, தற்போது இழப்பீடு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025