Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்
அம்பாறை, காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக இரு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த பட்ஜெட், தவிசாளர் கி.ஜெயசிறிலினால் நேற்று (13) 46ஆவது சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.
உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ச.நேசராஜா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ச.சிசிகுமார் மற்றும் என்.எம்.றணீஸ் ஆகியோர் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏனைய உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.ஜலீல், கே.குமாரசிறி மற்றும் கே. ஜெயதாசன் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
இதனடிப்படையில், காரைதீவு பிரதேச சபை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினரின் ஆதரவுடன் வரவு - செலவுத் திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த தவிசாளர், காரைதீவு பிரதேச சபையின் பட்ஜெட் வெற்றியானது தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வெற்றி என்றார்.
12 உறுப்பினர்களை கொண்ட இச்சபையில் 7 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வரவு - செலவு திட்டத்துக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago